நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து போனிகபூர் – ஹெச்.வினோத் – அஜித் ஒன்றிணைந்துள்ள வலிமை திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.
இதில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி ஹுமா குரேஷி நடித்து வருகிறார். இந்த படத்தில் யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக மட்டும் வலிமை படக்குழு ரஷ்யா செல்ல திட்டமிட்டுள்ள நிலையில், படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வலிமை படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அஜித் எப்போதுமே தான் பேசும் சம்பளத்தை மாதம் 5 கோடி வீதம் வாங்கிக்கொள்வாராம்.
அந்தவகையில் வலிமை படத்திற்கு ஆரம்பத்தில் 55 கோடி ரூபாய் சம்பளமாக பேசியிருக்கிறார். அதன் பின்னர் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தாமதமானதை அடுத்து அதனை ரூ.70 கோடியாக உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது.