• Fri. Apr 18th, 2025

சிறைக்குள் கதறும் மீரா மிதுன்… சைபர் க்ரைம் வைத்த அடுத்த ஆப்பு…!

By

Aug 18, 2021

பட்டியலினத்தவர்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் நேற்று முன் தினம் கேரளாவில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மீரா மிதுனை வரும் 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மீரா மிதுன் புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பட்டியலின மக்களை அவமதித்த குறித்த விசாரணைக்கு மீரா மிதுன் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. விசாரணையை ஆரம்பித்தாலே கூச்சலிட்டு ரகளை செய்வதாக கூறப்படுகிறது. எனவே மீரா மிதுனை மன நல மருத்துவரிடம் காண்பித்து, விசாரணை நடத்த சைபர் க்ரைம் போலீசார் திட்டமிட்டுள்ளார்களாம்.

நீதிமன்றம், கமிஷனர் அலுவலகம் என எங்கு அழைத்துச் சென்றாலும் மீரா மிதுன் சொன்ன விஷயங்களையே திரும்ப, திரும்ப கூறி கூச்சலிடுகிறாராம். எனவே மீண்டும் மீரா மிதுனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குள் அவர் மன அழுத்தத்தால் இப்படி நடந்து கொள்கிறாரா? என மனநல மருத்துவரை வைத்து பரிசோதிக்க காவல்துறையினர் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், சமீபத்தில் பட்டியலின இயக்குநர்கள் பற்றிய சர்ச்சைக் கருத்து என தொடர்ந்து யூ-டியூப்பில் வீடியோ வெளியிட்டு வந்த மீரா மிதுன் மீது அடுத்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது மீரா மிதுன் அவதூறு கருத்துக்களை பரப்பி வந்த யூ-டியூப் பக்கத்தை முடக்க யூ-டியூப் நிறுவனத்திற்கு சைபர் க்ரைம் போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். இது மீரா மிதுன் கிளப்பிய சர்ச்சைகளுக்கு எல்லாம் சரியான சவுக்கடி என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.