• Sat. Mar 21st, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

அஜித் 61 டைட்டில்; மறுக்கும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து தல அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாக உள்ள ajith 61 என்ற படத்தில் நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த மாதத்தில் துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படத்தின் பூஜை அன்று படத்தின் டைட்டிலை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் தற்போது அஜித் 61 படத்திற்கு வல்லமை என பெயரிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வைரலாகி வருகின்றன. மேலும், இந்த டைட்டில் வேண்டாம் என்றும் இது வலிமை என்ற டைட்டிலோடு அதிகம் ஒன்றிப் போகிறது, இதைவிட மாஸாக டைட்டிலை வையுங்கள் என அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.