தனது அடுத்த படத்திற்காக, பாலாவுடன் இணைகிறார் நடிகர் சூர்யா! இந்த படத்திற்காக இயக்குனர் பாலாவிடம் நடிகர் சூர்யா 3 மாதம் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். இதனால் படப்பிடிப்பு வேலைகள் விறு விறுப்பாக தொடங்கப்படவுள்ளன..
இந்த மாதம் படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது இந்த படத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.. இந்த படத்தில் சூர்யா காது கேட்காத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் எனகூறப்படுகிறது!
மாஸ் ஹீரோவாக நடித்து வரும் சூர்யா இப்படத்தில் வசனமே பேசாமல் நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற விமர்சனம் தொடங்கியுள்ளது! நீண்ட நாட்களுக்கு பிறகு சூர்யா – பாலா கூட்டணி இணைந்துள்ளதால் நந்தா, பிதாமகன் போன்ற அற்புதமான கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.