

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மூலமாக கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம் முழுவதிலிருந்து பெறப்பட்ட 3750 கடிதங்கள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த போராட்டத்தில் கிராம ஊராட்சி ஊழியர்கள் தூய்மைப் பணியாளர்கள் கிராம வறுமை ஒழிப்பு கணக்கர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் எனவும் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு மாவட்ட கருவூலத்தில் மூலமாக ஊதியம் வழங்கிட கோரியும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணி புரியும் கணினி இயக்குனர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் எனவும் கரொனா காலத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியமாக 15,000 வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சி பணியாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
