• Mon. Jun 5th, 2023

உச்ச நடிகையாக மாற்றம் கண்டுவரும் ஐஸ்வர்யா மேனன்

Byதன பாலன்

Mar 22, 2023

தமிழ் படம் 2’ எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இப்படத்தைத் தொடர்ந்து ‘நான் சிரித்தால்’, ‘வேழம்’, ‘ தமிழ் ராக்கர்ஸ்’ ஆகியபடங்களில் நடித்திருக்கிறார் . தமிழில் மட்டுமல்லாமல் இவர், தற்போது தெலுங்கில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் படத்தில் நிகில் சித்தார்த், கதையின் நாயகனாக நடித்து வருகிறார் ‘ஸ்பை’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா மேனன் நடித்து வருகிறார். பான் இந்திய படைப்பாக தயாராகி வருவதால் இந்த படம் தமிழிலும் வெளியாகும்.

இதனைத் தொடர்ந்து அஜித் குமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘வலிமை’ படத்தில் வில்லனாக நடித்த தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்திகேயா நடிப்பில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாதப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த இரண்டு திரைப்படங்களை தவிர்த்து, மேலும் சில படங்களில் நடிகை ஐஸ்வர்யா மேனனை கதையின் நாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *