• Tue. Feb 18th, 2025

மாணவர்களின் விமான பயணம்

ByKalamegam Viswanathan

Jan 18, 2025

மாணவர்களின் விமான பயணம் எனும் சாத்தியமில்லாத கனவை சாதனையாக்கிய கொண்டலூர் தலைமை ஆசிரியர் மைக்கேல்ராஜ். தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் கொண்டலூர் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மதுரையில் இருந்து விமான மூலம் சென்னைக்கு செல்கின்றனர்.

குறித்து மாணவர்களுடன் கலந்துரை செய்த போது, தங்கள் பள்ளியில் ரைட் சகோதரர் அவர்களைப் பற்றிய பாடம் நடத்திய தலைமையாசிரியர் தங்களின் ஆசையில் குறித்து கேட்டார். அதில் தாங்கள் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் எங்கள அழைச்சிட்டு போக முடியுமா என்று கேட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து கொண்டனூர் பள்ளி தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ் தனது நண்பர்கள் உறவினர்கள் மற்றும் சமூக சேவையின் உதவியுடன் 5 ஆம் வகுப்பில் பயிலும் 20 மாணவ, மாணவிகளுக்கு மதுரையில் இருந்து எனும் சாத்தியமில்லாத கனவை சாதனையாக்கிய கொண்டலூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ்.

தென்காசியில் இருந்து புறப்பட்டு இன்று காலை 7 மணி அளவில் மதுரை விமான நிலையம் வந்தடைந்த மாணவர்கள் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்,

பிர்லா கேளரங்கம்,3d அறிவியல் மையம், வண்டலூர் பூங்கா, மெரினா பீச் உள்ளிட்ட இடங்களை மாணவர்களுக்கு காண்பிக்க ஏற்பாடு செய்தார்.தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் கொண்டலூர் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மதுரையில் இருந்து விமான மூலம் சென்னைக்கு செல்கின்றனர்.

மாணவிகள் தனுஸ்ரீ, நிராஜா குறிப்பிடுகையில் எங்கள் பள்ளியில் தலைமையாசிரியர் விமானம் குறித்து அறிவியல் கண்டுபிடிப்புகள் பாடத்தில் ரைட் சகோதரர் களை பற்றி பாடம் நடத்தினார். பின் எங்களிடம் விமானத்தை பற்றிய உங்கள் கருத்து என்ன என கேட்டார்.

நாங்கள் விமானத்தில் பயணம் செய்ய எங்களுக்கும் ஆசைப்படுகிறோம் போக முடியுமா என கேட்டனர் .

அதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் அனைவரும் இணைந்து எங்களுக்கு விமானத்தில் பயணம் செய்ய ஏற்பாடு செய்தனர். இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

பள்ளித் தலைமையாசிரியர் மைக்கேல் ராஜ் குறிப்பிடுகையில் மாணவர்களிடம் படம் நடத்திய போது அவர்கள் விமானத்தை பற்றிய உங்களது விருப்பங்கள் என்ன என்று கேட்டோம். தாங்கள் பயணம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டனர். அதனை தொடர்ந்து துபாயில் உள்ள எனது நண்பர்கள் மற்றும் சமூக சேவகர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் துணையுடன் இந்த விமான பயணத்தை ஏற்பாடு செய்தோம். உதவியை அனைவருக்கும் நன்றி மாணவர்களின் கனவு நினைவானதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இன்று அறிவியல் தொடர்பாக பிரில்லா கேளரங்கம் 3d மையம், மெரினா பீச்சில் தலைவர்களின் சமாதிகள், தலைமைச் செயலகம், வள்ளுவர் கோட்டம், வண்டலூர் உயிரியல் பூங்கா ஆகிய இடங்களை மாணவர்களுக்கு சென்று காண்பிக்கவும் பின்பு இரவு ரயில் மூலம் புறப்பட்டு தென்காசி செல்கிறோம் எனக் குறிப்பிட்டார்.