• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நாக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை- பிரதமர் திறந்து வைத்தார்

ByA.Tamilselvan

Dec 11, 2022

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கப்படாத நிலையில் நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ளார்.
2017ம் ஆண்டு நாக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 1,575 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை இன்று திறந்து வைத்தார். எய்ம்ஸ் மருத்துவமனை பிரதமர் மோடியால் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் மகாராஷ்டிர மாநில முதல்வர், மாநில கவர்னர் உள்பட பலர் கலந்துகொண்டனர். நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை போன்று மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட 2019ம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.