அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பாக, பாக முகவர்கள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை அடுத்த கோவிலம்பாக்கத்தில் தனியார் மண்டபத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக, கோவிலம்பாக்கம். ஊராட்சியில் பாத முகவர்கள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாக முகவர்கள் எப்படி எல்லாம் பணி செய்ய வேண்டும் என்று அறிவுரை கூற, அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ சிங்காரம் தலைமையில் சோழிங்கநல்லூர் முன்னாள் சட்டமன்ற எம்எல்ஏ. கேபி கந்தன் முன்னிலையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூறி, அந்தந்த வட்டத்துக்கு பாகம் முகவர்களை தேர்வு செய்து அறிவுரை கூறி, வருகின்ற 2026.ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியை கோவிலம்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் எஸ்.கே.குமார், ரேகா செல்வராஜ், சுமதி சற்குணம், தீபா ரங்கநாதன், விஸ்வநாதன், எம்.முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், கழகத் தோழர்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார்கள்.





