• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சிவகாசியில் அதிமுக இளைஞர் பாசறை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ByTBR .

Feb 11, 2024

சிவகாசியில் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக இளைஞர் பாசறை நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை சார்பாக பாராளுமன்றம் நோக்கி பாசறை சிறப்பு பயிற்சி பட்டறை என்ற தலைப்பில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் முத்துராஜ் தலைமை வகித்தார். அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி, இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான பரமசிவம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ சந்திரபிரபாமுத்தையா, மாவட்ட கழக துணை செயலாளர் சுப்பிரமணி, அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பாபுராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுபாஷினி, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பலராம், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் விஜய்ஆனந்த், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ரமணா, மாவட்ட சிறுபான்மையினர் அணி செயலாளர் சையதுசுல்தான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், தலைவர் செல்வம், மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் மாரிமுத்து, மாவட்ட டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுரேஷ்குமார், சிவகாசி ஒன்றிய கழகச் செயலாளர்கள் ஆரோக்கியராஜ், லட்சுமிநாராயணன், பாலாஜி, கருப்பசாமி, மாநகர பகுதிகழக செயலாளர் சரவணகுமார், கிருஷ்ணமூர்த்தி, கருப்பசாமி பாண்டியன், சாம் என்ற ராஜா அபினேஸ்வரன், மாநகர அதிமுக கவுன்சிலர் கரைமுருகன், மாவட்ட இளைஞர் பாசறை துணைச் செயலாளர் அஜய் கிருஷ்ணா மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதியிலும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற தீவிர பிரசாரம் மேற்கொள்வது உள்பட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க. வில் பணியாற்றி 50 ஆண்டுகாலம் ஆனதை தொடர்ந்து நிகழ்ச்சியில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.