• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அதிமுகவில் இணைந்த அமமுக ஒன்றிய கவுன்சிலர்

ByTBR .

Feb 5, 2024

ஸ்ரீவில்லிபுத்தூர் அமுமுக ஒன்றிய கவுன்சிலர் அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுகவில் பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய கவுன்சிலரும் அமமுக மாவட்ட மாணவர் அணி துணை செயலாளருமான மாரிமுத்து மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் சாமிநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் தலைமையில் ஏராளமானோர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ மான்ராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக வடக்கு ஒன்றிய கழக செயலாளர் குறிஞ்சிமுருகன், விருதுநகர் வடக்கு ஒன்றியக் செயலாளர் மச்சராஜா, ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய கவுன்சிலர் செல்லப்பாண்டி மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.