
நாகர்கோவில் மாநகராட்சி மாதந்திர கூட்டம் மேயர் மகேஷ் முந்நிலையில் தொடங்கியது. துணை மேயர், ஆணையர் அடங்கிய கூட்டத்தில்.

கூட்டம் தொடங்கியதுமே அதிமுக, பாஜக,தமாக உறுப்பினர்கள் குடி நீர் கட்டணம் எப்போதும் போல் மீட்டர் அளவிலே கட்டணம் வசூலிக்க வேண்டும். ஒரு மாதத்திற்கு ஒரு வீட்டிற்கு. 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யவேண்டும். மாதக் கட்டணத்தை மாதம் ஒன்றிற்கு ரூ.160.00 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும். புதிதாக தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் புதிய திட்டமான வீட்டின் ஸ்கோயர் மீட்டர் அளவில் தண்ணீர் கட்டணம் வசூலிப்பது ஏற்புடையது அல்ல. இந்த முறையான தண்ணீர் கட்டணம் முறையை திரும்பப் பெறவேண்டும் என
அதிமுக, பாஜக,தமாக ஒரே கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கோரிக்கை வைத்தனர்.

மேயர் மகேஷ் இது நாகர்கோவில் மாநகராட்சி மட்டுமே முடிவு எடுக்க முடியாது. தமிழகம் முழுவதும் பின்பற்றுகிற அரசின் புதிய முறை என தெரிவித்ததும். மேயரின் கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவித்து, அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சியினர் வெளி நடப்பு செய்ததுடன், நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் வளாகத்தை விட்டு வெளியே வந்து தமிழக அரசின் புதிய அணுகுமுறையை கண்டித்து கோசம் எழுப்பினர்.
நிகழ்ச்சியில் பாஜகவை சேர்ந்த மண்டல தலைவர் முத்துராமன், பாஜகவை சேர்ந்த மீனதேவ் உட்பட அதிமுக,தமாகவின் ஒற்றை உறுப்பினர் உட்பட 12 மாநகராட்சி உறுப்பினர்கள் பங்கேற்றார்கள்.
