• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

அதிமுக அலுவலகம் இபிஎஸ்-க்கு சொந்தம்… உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

Byகாயத்ரி

Jul 20, 2022

கடந்த 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நடைபெற்ற போது அதிமுக அலுவலகத்தை ஓபிஎஸ் கைப்பற்றியதாக புகார் அளிக்கப்பட்டது. இதனால் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து காவல்துறையினர் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். இதனை அடுத்து அதிமுக அலுவலகத்தில் வைத்த சீலை அகற்ற வேண்டும் என பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த சில நாட்களாக விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது இதற்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதையெடுத்து, அதிமுக அலுவலகம் இபிஎஸ்க்கு சொந்தம் என உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.