• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அதிமுக உறுப்பினர் உரிமைச் சீட்டு ஆய்வு கூட்டம்

ByKalamegam Viswanathan

Oct 23, 2024

சோழவந்தான் பகுதியில் அதிமுக உறுப்பினர் உரிமைச் சீட்டு ஆய்வு கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

மதுரை புறநகர்மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட திருவேடகம் தென்கரை, மன்னாடிமங்கலம் குருவித்துறை, பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிகளில் உறுப்பினர் உரிமை சீட்டு ஆய்வு கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொறுப்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தண்டரை மனோகரன் கலந்துகொண்டு உறுப்பினர் உரிமை சீட்டு ஆய்வு செய்தார். வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், தலைமை தாங்கினார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.வி.கருப்பையா, மாணிக்கம், அம்மா பேரவை துணைச் செயலாளர் ராஜேஷ்கண்ணா, புளியங்குளம் ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் அரியூர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், வக்கீல் திருப்பதி துரை தன்ராஜ், மகளிர் அணிச் செயலாளர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மகளிர் அணி சாந்தி, மாரிமுத்து, மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா, மாவட்ட பிரதிநிதி திருவேடகம், சி. பி. ஆர்.மணி என்ற பெரியசாமி, பேரூர் செயலாளர் முருகேசன், முன்னாள் சேர்மன் எம். கே. முருகேசன், இளைஞர் அணி தண்டபாணி, துணைச் செயலாளர் தியாகு, பேரூராட்சி கவுன்சிலர்கள் ரேகா, ராமச்சந்திரன், டீக்கடை கணேசன், சண்முக பாண்டியராஜா, மன்னாடிமங்கலம், ராஜபாண்டி, ராம சுரேஷ், மணல் கிருஷ்ணன், அழகுமலை, கந்தன், மாயகிருஷ்ணன், ஆனந்தகுமார், முத்துப்பாண்டி, மயில் அண்ணா தொழிற்சங்க மண்டல இணைச் செயலாளர் சக்திவேல், சோழவந்தான் கிளை தலைவர் சின்னன், சசிகுமார், மகேந்திரன் நிர்வாகிகள் ஜெயபிரகாஷ், மேலக்கால் காசிலிங்கம், ராஜபாண்டி, தென்கரை ராமலிங்கம், ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பட்டி, தங்கபாண்டி, நாச்சிகுளம் தங்கபாண்டி, குருவித்துறை விஜய்பாபு, தண்டாயுதம், காசிநாதன், வனிதா கச்சிராயிருப்பு, முனியாண்டி, முள்ளிப்பள்ளம் சேது பாண்டியம்மாள், ராமநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இளைஞர் அணி மாவட்ட இனை செயலாளர் கேபிள் மணி நன்றி கூறினார்.