• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஈரோடு தொகுதியில் அதிமுக வெற்றி பெறுவது உறுதி : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

Byவிஷா

Mar 25, 2024

ஈரோடு தொகுதி அதிமுகவின் கோட்டையாக இருப்பதால், மக்களவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு அரசு மருத்துவமனை சந்திப்பு அருகில் ஈரோடு தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை அமைக்க கால்கோள் விழா நடைபெற்றது. இதில் தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் பலர் பங்கேற்றனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்..,
அதிமுக சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் உணவகத்தை மலிவு விலையில் சேவையாற்றி வருகிறார்.
ஈரோடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி உறுதி செய்தது போல தமிழகத்தில் 40 நாடாளுமன்ற தொகுதியில் வரலாறு படைக்கும் வகையில் அதிமுக வெற்றி வாய்ப்பு உள்ளது. மக்களும் அதிமுகவுக்கு ஆதரவாக வாக்களிக்க தயாராகி வருகிறார்கள்., அதிமுகவின் களப்பணி என்பது எந்த இயக்கத்தாலும் செய்ய முடியாத வகையில் இருக்கும். அதற்கு அதிமுக கூட்டணி நிர்வாகிகள் உறுதியாக இருப்பார்கள். அதிமுகவைப் பொறுத்தவரை கொங்கு மண்டலம் அதிமுக கோட்டையாக இருப்பதால் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று என தெரிவித்தார்.