விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக் கூட்டத்திற்கு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே. டி .ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளராக அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான இன்பதுரை கலந்து கொண்டார்.
அவருக்கு காமராஜர் யூத் ஃபவுண்டேஷன் நிர்வாகி அர்ஜுன் சாம் தலைமையில் சிவகாசி நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
