• Sun. Mar 1st, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

இறுதிகட்ட பிரச்சாரத்தில் அதிமுக பிரம்மாண்ட பேரணி

ByG.Suresh

Apr 17, 2024

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸின் இறுதிக்கட்ட பிரச்சாரமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சேவியர்தாஸ் போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கலுக்கு பின்னர் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுபயனம் மேற்கொண்டு தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்த நிலையில் நாளை மறுநாள் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரமானது நிறைவடைகிறது. இந்நிலையில் வேட்பாளர்கள் அனைவரும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக சிவகங்கை சிவன் கோவிலில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற வேட்பாளர் சேவியர் தாஸ் தலைமையிலான பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், கழக அமைப்பு செயலாளருமான ராஜன் செல்லப்பா மற்றும் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் ஆகியோர் பங்கேற்றனர்.