• Wed. May 1st, 2024

பாஜக தேர்தல் வாக்குறுதி 500 நாட்களில் 100 வாக்குறுதி-கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பேட்டி.

BySeenu

Apr 17, 2024

மத்தியில் ஆளும் பாஜகவும், மாநிலத்தில் ஆளும் திமுகவும் இதுவரை எந்த திட்டங்களையும் கோவைக்கு செயல்படுத்தவில்லை என கோவை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சிங்கை ராமச்சந்திரன் தெப்பக்குளம் மைதானத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர் மத்தியில் ஆளும் பாஜகவும், மாநிலத்தில் ஆளும் திமுகவும் இதுவரை எந்த திட்டங்களையும் கோவைக்கு செயல்படுத்தவில்லை.

குறிப்பாக தொழில் நகரமான கோவையில் மின்சார பிரச்சனை மற்றும் விசைத்தறி பிரச்சனைகள் குறித்து இரண்டு ஆட்சியாளர்களும் இதுவரை சரி செய்யப்படவில்லை.

அதேபோல் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலை கடந்த மூன்று ஆண்டுகளில் கரூர் மக்களுக்கும் கோவை மக்களுக்கும் எந்த திட்டங்களையும் செய்யவில்லை.தான் கோவையைச் சேர்ந்தவன், இதுவரை 25 ஆயிரம் குடும்பங்களுக்கு சேவைப் பணிகளை செய்துள்ளேன். இதற்கு முன்னால் அதிமுக சார்பில் போட்டியிடும் கணபதி ராஜ்குமார் கோவை மாநகராட்சி மேயராக இருந்தவர் மக்களுக்கு இதுவரை என்ன செய்துள்ளார்.நான் இப்போது செய்து கொண்டுள்ளதுபோல் எம்.பி தேர்தலில் வெற்றி பெற்று பல்வேறு திட்ட பணிகளை மேற்கொள்வேன்.அண்ணாமலையுடன் நேருக்கு நேர் பேசுவதற்கு தயார்,அவர் பயந்து கொண்டு வருவதில்லை.எங்களின் பிரதமரின் வேட்பாளர் மக்களின் திட்டம் மட்டும் தான், மக்களுக்கு தேவையானதை நாங்கள் கொண்டு வந்து கொடுப்போம்.யாருக்கு ஆதரவு தர வேண்டும் என அவசியம் இல்லை.

பாஜக தேர்தல் வாக்குறுதி 500 நாட்களில் 100 வாக்குறுதி ,இதுவரை 20 ஆயிரம் புத்தகம் படித்தேன் என்று சொன்னாது போல தான் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *