விருதுநகரில் அதிமுக பொன் விழா ஆண்டை முன்னிட்டு விருதுநகர், சிவகாசியில் 34 இடங்களில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் திருவுருவ படங்களுக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதிமுக பொன் விழா ஆண்டு இன்று தமிழகம் முழுவதிலும் அண்ணா திமுக சார்பாக
சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. விருதுநகர் மேற்கு அண்ணா திமுக
சார்பில் விருதுநகரில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கும் எம்ஜிஆர் ஜெயலலிதா திரு உருவப் படங்களுக்கும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து விருதுநகர், ஆமத்தூர், ஆனைக்குட்டம் உட்பட 5 இடங்களிலும் திருத்தங்கல்லில் காளிமுத்து நகர், போலிஸ் காலனி முக்கு, மேலரதவீதி தேவர் சிலை அருகில், திருத்தங்கல் நகராட்சி அலுவலகம் அருகில், திருத்தங்கல் ரயில்வே கேட் பெரியார் சிலை ஆகிய 5 இடங்களிலும் சிவகாசி நகரில் சிவகாசி ரயில்வே பீடர் ரோடு, அண்ணா காலனி, பராசக்தி காலனி, இரட்டை சிலை, தேவர் சிலை,பழைய விருதுநகர் ரோடு கல்லறை தெரு, அம்பேத்கர் சிலை, வசந்த் அன் கோ, தட்டா ஊரணி ஆகிய 9 இடங்களிலும் சிவகாசி ஒன்றிய பகுதிகளில் நாரணபுரம், விஸ்வநத்தம், சித்துராஜபுரம், சாட்சியாபுரம் உட்பட 15 இடங்களிலும் மொத்தம் 34 இடங்களில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் திருவுருவ படங்களுக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

ஏராளமான இடங்களில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ மான்ராஜ் மற்றும் ஒன்றிய கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதே போன்று இன்று மாலை திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதிகளிலும் ஏராளமான இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் திருவுருவ படங்களுக்கு முன்னாள்
அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கட்சி
கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்குகின்றார்.
படம் விளக்கம் அதிமுக பொன் விழா ஆண்டை முன்னிட்டு விருதுநகர் மேற்கு அண்ணா திமுக சார்பில் விருதுநகரில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கும் எம்ஜிஆர் , ஜெயலலிதா திரு உருவப் படங்களுக்கும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ எம். எஸ். ஆர். ராஜவர்மன் அவைதலைவர் வக்கீல் விஜயகுமார், மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் கலாநிதி, ஒன்றியச் செயலாளர்கள் தர்மலிங்கம், கண்ணன் நகர கழகச் செயலாளர் முகம்மது நெயினார், மாவட்ட இலக்கிய அணி செயலாளரும் மாவட்ட கவுன்சிலர் மச்சராஜா, தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் பாசறை சரவணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அருகில் உள்ளனர்.














; ?>)
; ?>)
; ?>)