• Mon. Dec 15th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஓபிஎஸ் மனைவி மறைவு – தமிழிசை இரங்கல்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி மறைவுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், விஜயலட்சுமி மறைவுக்கு இரங்கல் குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல்நலக் குறைவால் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

அவரை இழந்து வாடும் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு சகோதரி விஜயலட்சுமியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதிமுக தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் ஓபிஎஸ் மனைவி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விஜயலட்சுமியின் உடல் தேனிக்கு கொண்டுசெல்லப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.