• Wed. Mar 19th, 2025

2 பேரூராட்சி தலைவர் பதவிகளை கைப்பற்றிய அதிமுக!

சேலம் மாவட்டம் வனவாசி பேரூராட்சியின் தலைவர் பதவியை தன் வசம்படுத்தியது அதிமுக.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி, நங்கவள்ளி, வனவாசி ஆகிய 3 பேரூராட்சிகளில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது.
சேலம் அருகே நங்கவள்ளி, வனவாசி பேரூராட்சிகளின் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியுள்ளது.
அதன்படி, நங்கவள்ளி பேரூராட்சி தலைவர் மாணிக்கம், வனவாசி பேரூராட்சியின் தலைவர் ஞானசேகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அதிமுக வேட்பாளர் ஞானசேகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இதுபோன்று, ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுக கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்ட சிபிஎம் வேட்பாளர் கீதாவிற்கு வழிமொழிய, முன்மொழிய யாரும் வராததால் போட்டி வேட்பாளர் திமுகவை சேர்ந்த பாண்டியம்மாள் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. போதிய உறுப்பினர்கள் வருகை தராததால் மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர். மேலும், கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடப்படுகிறது.