• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பிரமலைக்கள்ளர் சமுதாய மக்களை அதிமுக ஏமாற்ற முடியாது-வழக்கறிஞர் இளமகிழன் கண்டனம்

Byதரணி

Aug 24, 2024

பச்சைத்துரோகிகளான பழனிச்சாமியையும், ஆர்.பி.உதயகுமாரையும் வன்மையாக கண்டிக்கிறோம் என மதுரை தெற்கு மாவட்டத்தில் உளள தலைமை செயற்குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான இளமகிழன் கண்டனத்தை தெரிவிக்கிறார்.

பிரமலைக்கள்ளர் சமுதாய மக்கள் டி.என்.டி. சான்றிதழ் கேட்டு, பல வருடங்களாக போராடிய போது, ஆட்சி அதிகார மமதையில் இருந்த போது, எடப்பாடி பழனிச்சாமி திரும்பிக் கூட பார்க்கவில்லை. ஆர்.பி. உதயகுமார் செவி கொடுத்து கேட்க மறுத்தார்.

2021 சட்டமன்றத் தேர்தல் சுயநலத்திற்காக, தேர்தல் அறிவிப்பு வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு அவசர அவசரமாக வன்னியர் சமுதாயத்திற்கு மட்டும் 10.5% இட ஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பித்து, மற்ற சமூகங்களை வஞ்சித்த பச்சைத்துரோகிகள்  பழனிச்சாமி, ஆர்.பி.உதயகுமார் வகையறா..

எடப்பாடி பழனிச்சாமி கையில் அதிமுக  ஒரு குறிப்பிட்ட சாதி கட்சியாக, மேற்கு மண்டலத்திற்குள் சுருக்கிப்போனதை மீட்க, அரசியல் கோமாளிகள் கோளாறில் ஆடும் அரசியல் நாடகம் இது.

2024 மக்களவை தேர்தலில் தேனி, இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி தொகுதிகளில் டெபாசிட்டை பறிகொடுத்தது பழனிச்சாமி கும்பல். மதுரை மக்களவை தொகுதியில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.  திண்டுக்கல் மக்களவை தொகுதியில் ஒரு சுற்றில் கூட நெருங்கிட முடியாத நிலை.

தென் மாவட்ட மக்களால் துடைத்து எரியப்பட்ட துரோகக்கும்பல், அரசியல் செய்ய வேறு வழியின்றி இல்லாத ஒன்றை சொல்லி தவறாக வழி நடத்த முயல்வதை மக்கள் அறிவார்கள்.

 உங்க, கபட, நாடகம் கரை சேராது; (தென்மாவட்டங்களில் உங்கள்) போலி அரசியல் எடுபடாது!!  என்று இளமகிழன் கண்டன அறிக்கையாகவே வெளியிட்டு இருக்கிறார்.