குஜிலியம்பாறை ஒன்றியத்தில் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் கிராமம் கிராமமாக சென்று தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணி வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் குஜிலியம்பாறை ஒன்றியம் பொம்மாநாயக்கன்பட்டி, ராமகிரி, காச்சகாரன்பட்டி, கொல்லப்பட்டி, விராலிப்பட்டி, கூட்டக்காரன்பட்டி, சாணிப்பட்டி, வாண்ராயன்பட்டி, அணியாப்பூர், பாளையம், முத்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளுக்கு சென்று இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்.
அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவத்தை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள்.

உடன் அதிமுக குஜிலியம்பாறை ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் மு.கணேசன், குஜிலியம்பாறை ஒன்ரிய செயலாளர் . ரவிச்சந்திரன், ஒன்றிய தலைவர் பாலகிருஷ்ணன், இளைஞர் அணி செயலாளர் மகேந்திரன், பாட்டாளி தொழிற்சங்க செயலாளர் சிவமணி, அமைப்புசாரா தொழிற்சங்க செயலாளர் செல்வகுமார் மற்றும் அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.




