சோழவந்தான் தொகுதி சோழவந்தான் அருகேகருப்பட்டி ஊராட்சியில் கருப்பட்டி, கணேசபுரம், அமைச்சியாபுரம், பொம்பன்பட்டி ஆகிய கிராமங்களில் ஆகிய கிராமங்களில் முன்னாள் எம்எல்ஏ அதிமுக வேட்பாளர் மாணிக்கம் கிராமம் கிராமமாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.

தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் லட்சுமி, மாவட்ட நிர்வாகி கேபிள் மணி,ஜெய்பிரகாஷ், கருப்பட்டி நிர்வாகிகள் ஒன்றிய பொருளாளர் தங்கப்பாண்டியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நாகம்மாள், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முருகன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் செல்வகுமார், சுரேஷ் கேசவன், ரேஷன் கடை முருகன் உட்பட அதிமுக, பாஜக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பட்டாசு வெடித்து ஆராத்தி எடுத்து வரவேற்றனர்.



