• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இ.மகேந்திரன் ..,

ByP.Thangapandi

Apr 2, 2026

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30 ஆம் தேதி துவங்கிய நிலையில் இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில்.,

உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அக் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் இ.மகேந்திரன்., தனது வேட்புமனுவை உசிலம்பட்டி சார் ஆட்சியர் உத்கர்ஷ்குமார் – இடம் வழங்கினார்., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகளும் உடனிருந்தனர்., தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அக் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் வெள்ளைப்பாண்டி தனது வேட்புமனுவை சார் ஆட்சியரிடம் வழங்கினார்.,

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்., உசிலம்பட்டி தொகுதிக்கு அதிமுக ஆட்சியின் போது பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளதோடு, நலத்திட்டங்களையும் செய்துள்ளோம் ஆதலால் வரும் சட்டமன்ற தேர்தலில் உசிலம்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளரான இ.மகேந்திரன் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பெறுவார் என பேட்டியளித்தார்.,