• Fri. Jan 17th, 2025

கிராம மக்களிடம் புளியம்பழம் உலுக்கி கொடுத்து அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ByG.Suresh

Apr 16, 2024

சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக களம் காண்பவர் சேவியர் தாஸ். தேர்தல் பரப்புரை நாளை மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில் இன்று காங்கிரஸ்,அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். பரப்புரையின் போது மக்களை கவரும் விதமாக வேட்பாளர்கள் வித்தியாசமான செய்கையில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒன்றியம் திருமண வயல் என்ற கிராமத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதனுடன் வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ், அங்கு புளியம்பழம் உலுக்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் வாங்கருவாளை வாங்கி, மரத்தில் இருந்த புளியம்பழத்தை உலுக்கி கொடுத்து தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.