• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விவசாயத் தொழிலாளர் சங்கம் போராட்டம்..,

ByK Kaliraj

May 6, 2025

விருதுநகர் மாவட்டம் வத்றாயிருப்பு தாலுகா நெடுங்குளத்தில் இருந்து நெல் நடவுக்கு சென்று திரும்பியபோது மரணமடைந்த விவசாயத் தொழிலாளர்கள் தங்கம்மாள்.அருஞ்சுனை .ராமர் ஆகியோருக்கு தலா 5.லட்சம் நிவாரணம் வழங்கிக் கோரியும், கால் இழந்த காயம்பட்ட எல்லோருக்கும் உரிய நிவாரணத் தொகை
ரூ 3 லட்சம் வழங்கிடக்கோரியும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் காத்திருக்கும் போராட்டம் வத்திராயிருப்பு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்றது.

வட்டாட்சியர் பேச்சுவார்த்தைக்கு அழைத்துப்பேசினார், முடிவில், கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்து எழுத்துப்பூர்வ நகலை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அளித்தார்.

அதனை ஏற்று தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது வி.தொ.சா. தாலுகா தலைவர் G.சுப்பிரமணியன். Ex சேர்மன் எஸ். கொடிக்குளம். A. சுந்தரம்.மாநில பொருளாளர் அ.பழனிச்சாமி. மாவட்ட தலைவர் பூங்கோதை மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன் மாவட்ட பொருளாளர் ஜோதிலட்சுமி. CPM. செயலாளர் பெனரி.TARATDAC மாவட்ட செயலாளர் K.நாகராஜ் மாவட்ட துணைத்தலைவர் ஜெயக்குமார் தென்னை சங்க மாவட்ட செயலாளர் காளிதாஸ் M.பழனிச்சாமி ஒன்றிய செயலாளர் தங்கப்பாண்டி உள்பட ஊர் பொதுமக்கள் 200பேர்கலந்துகொண்டனர்.