• Wed. Apr 23rd, 2025

மரத்தில் தண்டுப் பட்டை கட்டுதல் வேளாண் மாணவிகள் செயல் விளக்கம்..,

ByKalamegam Viswanathan

Mar 31, 2025

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வட்டத்தில் ஊரக வேளாண் அனுபவ திட்டத்தில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவிகள் ஈடுபட்டுள்ளனர்.

அலங்காநல்லூர் அருகே, பாலமேடு கிராமத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் வேளாண் மாணவி தேவிஸ்ரீ மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்த மா மரத்தில் தண்டுப் பட்டை கட்டுதல் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காட்டினார்.

பாலிதீன் பட்டை மற்றும் எண்ணைபசைப்பொருள் ஆகியவற்றை பயன்படுதுவதன்முலம் மரத்தின் உச்சிக்கு இளம் பூச்சிகள் செல்வதைத் தடுக்கின்றது.பட்டை கட்டுதல் என்பது விவசாயிகளால் எளிதாக செயல்படுத்தக்கூடிய ஒரு எளிய நுட்பமாகும்.அப்பகுதியில் உள்ள மா மர விவசாயிகள் இதில் கலந்துகொண்டு பயனடைந்து மாணவிக்கு நன்றி கூறினர்.