• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விவசாய கடனை தள்ளுபடி செய்தது ப. சிதம்பரம் தான்…கார்த்திக் சிதம்பரம் பேச்சு!

ByG.Suresh

Apr 3, 2024

விவசாயிகள் கடனை ரூ60 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்து விவசாயிகளை காப்பாற்றியவர் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம். தமிழினத்தலைவர் டாக்டர் கலைஞர் ஆட்சியின் போது விவசாயிகள் கடனை ரூ8 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்தார். விவசாயிகள் கடன் தள்ளுபடியில் அதிமுகவினர் உள்ளிட்டோர் பயன்பெற்றனர். தமிழக முதல்வர் இந்தியாவிற்கு முன் உதாரண ஆட்சி செய்கிறார். தளபதி ஆட்சியில் விவசாயிகள் கடனும், மகளிர் குழுக்கள் கடன் செய்யப்பட்டன. கல்விக்கடன் இளைஞர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார். இப்போதைய ஒன்றிய அரசு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ரூ25லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்திருக்கிறார்கள். இவர்கள் மோடி ஆட்சியினர் யார் பக்கம் நிற்கிறார்கள் என சிவகங்கை திமுக நகர் செயலாளர் சிஎம் துரைஆனந்த் பிஜேபி கட்சியினரை பார்த்து கேட்கிறார். சிவகங்கை நாடளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் ப.சிதம்பரத்திற்கு வாக்கு கேட்டு சிவகங்கையில் பேசும் போது சி.எம்.துரைஆனந்த் கேள்வி கேட்டார்.