• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

மீண்டும் ஒரு புயல் சின்னம்

Byமதி

Nov 9, 2021

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்து இருக்கிறது. இந்தநிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் 2 நாட்கள் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி வடதமிழகத்தை 11-ம் தேதி அதிகாலை வந்தடையும். நவம்பர் 10, 11-ந் தேதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு தமிழகத்தில் படிப்படியாக மழை குறையலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.