• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

போதைப்பொருள் விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசு பதவி விலக வலியுறுத்தி,அதிமுகவினர் துண்டு பிரசுரங்கள்

ByT.Vasanthkumar

Aug 1, 2024

குன்னம் பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசு பதவி விலக வலியுறுத்தி மாவட்ட கழக செயலாளர் தமிழ்செல்வன் தலைமையில் அதிமுகவினர் துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

பெரம்பலூர் அதிமுக வேப்பூர்‌ தெற்கு ஒன்றியம்‌ சார்பில் குன்னம் பேருந்து நிலையத்தில் உள்ள பொதுமக்களிடம் தெற்கு ஒன்றியம் சார்பில் திமுக அரசு பதவி விலக வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை, மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை.இரா.தமிழ்செல்வன் தலைமையில் முன்னாள் அமைச்சர் வரகூர். அருணாச்சலம், ‌ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூவை. செழியன் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.

தமிழகத்தில் கள்ளச்சாராயம் மரணங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலர் உயிரிழந்து வருகின்றனர்.

போதைப் பொருள் பழக்கம் இளைஞர்களையே மிகவும் அதிகரித்து வருகிறது.
இதனை தடுக்க தவறிய திமுக அரசு பதவி விலக வேண்டுமென வியாபாரிகள் பொதுமக்கள் மாணவர்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கான‌ ஏற்பாடுகளை மாவட்ட கழக அவைத்தலைவர் குன்னம்.குணசீலன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன் ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ராஜாராம்,மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வீரபாண்டியன், வேப்பூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வமணி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் சந்திரகாசன், ஒன்றிய அவைத் தலைவர்கள் கீழப்புலியூர் நடராஜன், குழும்பூர் தா. செல்வம்,வழக்கறிஞர்கள் ராமசாமி, செந்தில்நாதன், குன்னம் ரெங்கநாதன், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.