இயக்குனர் பாரதிராஜாவுக்கு மஞ்சள் காமாலை அறிகுறி தென்படுவதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாரதிராஜாகடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அதில், தனுஷுக்கு தாத்தாவாக, பிரகாஷ் ராஜிற்கு அப்பாவாக பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தினார். அவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா சென்னை தி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு லேசான மஞ்சள் காமாலை நோய் அறிகுறி தென்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர் நலமாக உள்ளார். மருத்துவர்கள் பாரதிராஜாவை சில நாட்கள் வரை ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர். ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் என தெரிகிறது.
இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி
