• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் ஒத்திவைப்பு

ByP.Thangapandi

Nov 7, 2024

உசிலம்பட்டி அருகே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்த கவுன்சிலருக்கு இரங்கல் தீர்மானத்துடன் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி ஒன்றிய சேர்மன் ரஞ்சனி, துணை சேர்மன் மலேசியா பாண்டி மற்றும் ஆணையாளர்கள் அன்பரசு, ராஜா, நிர்வாக ஆணையாளர் தெய்வ ராமன் மற்றும் அனைத்து கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் 4 வது வார்டு கீரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் துரைப்பாண்டி கடந்த ஆகஸ்ட் 9 ம் தேதி விபத்தில் உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு இன்று மௌனஅஞ்சலி செலுத்தி அனைத்து கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

இதில் 37 தீர்மானங்களில் 37 வது தீர்மானம் கவுன்சிலர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் மட்டும் நிறைவேற்றி அனைத்து கவுன்சிலர்களும் கூட்டத்தை ஒத்தி வைத்தனர்.