தமிழ்நாடு முழுவதும் வீடு, மனை போன்ற சொத்துக்கள் வாங்கும் மக்களுக்கு இன்று கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று பதிவுத்துறை கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் வீடு, மனை போன்ற சொத்துக்கள் வாங்கும் மக்கள், அதற்கான கிரைய பத்திரங்களை, சுபமுகூர்த்த நாட்களில் பதிவு செய்வது வழக்கம். அந்த நாட்களில் அதிக அளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அன்றைய நாட்களில் ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்வது வழக்கம். குறிப்பாக அன்றைய நாட்களில் வழக்கமாக, 100 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும்,
இந்த நிலையில் இன்று சுபமுகூர்த்த தினமென்பதால் பத்திரப்பதிவு அலுவலகங்களில் இன்று 150 முன்பதிவு டோக்கன்கள் வழங்கவும், இரண்டு சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200 டோக்கன்களுக்குப் பதிலாக 300 முன்பதிவு டோக்கன்கள் வழங்கவும் பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.