கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் படி கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி 42 – வது வார்டு 262, 256 பூத் -இருளப்பபுரம் பகுதியில் “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர்களை வீடு வீடாக சென்று சேர்த்தனர். இந்நிகழ்ச்சி, மாநகர செயலாளர் ஆனந்த் தலைமையில், கிழக்கு பகுதி செயலாளர் துரை முன்னிலையில் நடந்தது.

இதில் குமரி மாவட்ட முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவரும், 42வது வார்டு வட்ட செயலாளர் பிரபா G ராமகிருஷ்ணன், கவுன்சிலர் ஸ்டாலின் பிரகாஷ், வார்டு பிரதிநிதிகள் மால்டன் ஜினின், லீனஸ் ராஜ், நிர்வாகிகள் கிளிட்டஸ், ஸ்டான்லி மோகன்பாபு, மைக்கேல் ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.