இந்திய பணக்கார்களில் முதல் இடத்தில் உள்ள அதானியின்சொத்துமதிப்பு நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது.
அதானிகுழுமத்திற்கு இந்தியாவில் மட்டுமல்ல உலக முழுவதும் பல நாடுகளில் வியாபார நிறுவனங்களை கொண்டுள்ளது.அதானி குழுமத்தை சேர்ந்த அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்பு ரூ.3 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. கடந்த 6 மாதங்களில் அதானி எண்டர் பிரைசஸ் பங்கின் விலை 52 சதவிகிதம் அதிகரித்துள்ளது. உலக பணக்காரர்கள் வரிசையில் அதானி மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
அதே நேரத்தில் உலக அளவில் ஏழைகள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் நைஜீரியாவை பின்னுக்கு தள்ளி அதிக ஏழைகள் கொண்ட நாடாக இந்தியாமாறியுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.