• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பணக்காரர்கள் பட்டியலில் 2ம் இடத்திலிருந்து சரிந்தார் அதானி

ByA.Tamilselvan

Sep 28, 2022

உலக பணக்காரர்கள் பட்டியிலில் 2ம் இடத்திலிருந்து 3ம் இடத்திற்கு கவுதம் அதானி பின்தங்கி உள்ளார்.
உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் கடந்த வாரம் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி 2-வது இடத்துக்கு முன்னேறினார். இதன் மூலம் உலகின் ‘டாப்10’ பணக்காரர்கள் பட்டியலில் எலொன் மஸ்க்கிற்கு அடுத்தப்படியாக கவுதம் அதானி இருந்து வந்தார். இந்த நிலையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் தற்போது அதானி பின்னடைவை சந்தித்து உள்ளார். புளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டின்படி கவுதம் அதானி 135 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளார். இந்திய பங்கு சந்தை சரிவால் அவரது சொத்து மதிப்பு குறைந்தது. அதானியின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.10.98 லட்சம் கோடியாகும். எலொன் மஸ்க் 245 பில்லியன் டாலர் சொத்துடன் தொடர்ந்து உலக பெரும் பணக்காரரகளில் முதல் இடத்தில் உள்ளார். அதை தொடர்ந்து கடந்த வாரம் கவுதம் அதானி முதல் முறையாக 2-வது இடத்துக்கு முன்னேறினார். தற்போது 3-வது இடத்துக்கு பின் தங்கி உள்ளார்.