திருவனந்தபுரம் விழிஞ்ஞம் அதானி துறைமுகம் அண்மையில் திறப்பு விழா கண்டது.
திருவனந்தபுரம் விழிஞ்ஞம் அதானி துறைமுகம் அண்மையில் திறப்பு விழா கண்டது. அந்த துறைமுகத்திலிருந்து கொச்சிக்கு ரசாயன திரவம் கண்டெயுனருடன் சென்ற கப்பல் கொச்சி துறைமுகம் நெருங்கிய நேரத்தில் , ஒரு பக்கமா சாய்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் இருந்து 9_மாலுமிகள் கடலில் குதித்து தப்பிய நிலையில்.

கடலில் விபத்தில் சிக்கிய கப்பலில் இருந்து கடலில் சிதறிய ரசாயனம் நிறைந்த கண்டெய்னர்களில் இருந்து சித்திய ரசாயனம் கடல் நீரின் மேல் பக்கம் படர்ந்துள்ளதை.
கேரள அரசு இதனை ஒரு பேரிடராக அறிவித்துள்ளது.
கொச்சி கடல் பரப்பில் சிதறிய ரசாயன கண்டெய்னர்கள், அலையின் வேகத்திலும்,கடல் நீரோட்டத்தின் காரணமாக கடல் பரப்பில் பல்வேறு இடங்களில் மிததுக் கொண்டு,கடல் நீரோட்டத்திற்கு ஏற்ப கடல் நீர் பரப்பளவு பகுதியில் மிதத்துக் கொண்டு இருப்பது குறித்து கேரள அரசும்,குமரி மாவட்டம் நிர்வாகமும். மீனவர்கள் யாரும் கண்டெய்னர்களை தொடவேண்டாம், கடல் பரப்பில் மிதக்கும் எண்ணெய் தன்மையால். கடலில் உள்ள மீன்கள்,கடல்பரவைகள் பெரிய எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலம் கொச்சி அருகே கடலில் மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்த கண்டைனர்கள் சில கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கோடிமுனை கடற்கரையில் கரை ஒதுங்கியது. இதனை குமரி ஆட்சியர் அழகு மீனா நேரில் போய் பார்த்து ஆய்வு செய்ததோடு. மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கடலில் பரவும் ரசாயனம் கலை எண்ணை போல் மிதப்பதை அகற்று பணிகளை பேரிடர் மீட்பு குழு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.