• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

என்டிடிவியின் பங்குகளை வாங்கிய அதானி குழுமம்…

Byகாயத்ரி

Aug 24, 2022

இந்தியாவின் பிரபல செய்தி நிறுவனமான என்டிடிவியின் 30 சதவீதப் பங்குகளை அதானி குழுமம் வாங்கியது.

அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலதிபர். உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் 4-வது இடத்தில் இருப்பவர்.அதானி தன் குழுமத்தை விரிவாக்கும் வகையில் புதிதாக பல தொழில்களிலும் முதலீடு செய்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற 5ஜி ஏலத்தில் அதானி நெட்வோர்க் என்கிற புதிய நிறுவனம் பங்குபெற்றது. மேலும், அதானி ஒடிசா மாநிலத்தின் ராயகடா பகுதியில்அலுமினிய சுத்திகரிப்பு ஆலையை அமைப்பதற்காக அம்மாநில அரசிடம் உரிமம் பெற்றதுடன் ரூ.41,000 கோடியை அந்நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளார். இந்நிலையில், இந்தியாவின் பிரபல செய்தி நிறுவனமான என்டிடிவியின் 29.18சதவீதப் பங்குகளை அதானி குழுமம் வாங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் மூன்றில் ஒரு பங்கை கையகப்படுத்தியுள்ளதால் நிர்வாக முடிவுகளைக் எடுக்கக் கூடிய பங்குதாரராகவும் அதானி குழுமம் செயல்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.