• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

திருப்பதியில் மூன்று மணி நேரம் நடந்து சென்று சாமி தரிசனம் செய்த நடிகை..!

Byவிஷா

Dec 15, 2023

நடிகை தீபிகா படுகோன் திருப்பதியில் மூன்று மணி நேரம் நடந்து சென்று ஏழுமலையானை தரிசனம் செய்திருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது.
பாலிவுட்டில் உச்ச நடிகையாக முன்னணியில் இருந்து வருபவர் நடிகை தீபிகா படுகோன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பதான், ஜவான் 2 படங்களும் 1000 கோடிக்கும் மேல் வசூலித்தன. ஜவான் படத்தில் அவரது சண்டை காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.
ஹாலிவுட்டுக்கு இணையான கவர்ச்சியிலும் தாராளமாக நடித்து வருகிறார். தீபிகா படுகோன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் உள்ள நடைப்பாதையில் பாத யாத்திரையாக நடந்து சென்றார். பக்தர்களுடன் இணைந்து பாத யாத்திரையாக இரண்டரை மணி நேரம் நடந்து திருமலையை அடைந்தார். நடைபாதையில் நடந்து சென்ற பக்தர்கள் தீபிகா படுகோனுடன் செல்பி எடுத்து கொண்டே சென்றனர்.
நேற்று இரவு திருமலையில் உள்ள ராதேயம் விருந்தினர் மாளிகையில் தங்கி இன்று காலை விஐபி தரிசனத்தில் ஏழுமலையானை நடிகை தீபிகா படுகோன் வழிபாடு செய்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.