• Thu. Feb 5th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

சண்டை காட்சியில் பலத்த காயமடைந்த நடிகை சம்யுக்தா ஹெக்டே…

Byகாயத்ரி

Jul 29, 2022

தமிழில் கோமாளி, பப்பி, மன்மத லீலை போன்ற படங்களில் நடித்து இருப்பவர் சம்யுக்தா ஹெக்டே. அவருக்கு ஷூட்டிங்கில் காயம் ஏற்பட்டு இருப்பது கன்னட சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகை சம்யுக்தா ஹெக்டே தற்போது கிரீம் என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் அபிஷேக் பசந்த் அந்த படத்தை இயக்கி வருகிறார். சம்யுக்தா ஸ்டண்ட் பயின்றவர் என்பதால் அந்த படத்தின் சண்டை காட்சிகளில் அவரே நடித்து இருக்கிறார். ஒரு முக்கிய சண்டை காட்சியில் ரிஸ்க் அதிகம் என்பதால் டூப் பயன்படுத்தலாம் என இயக்குனர் கூறி இருக்கிறார். ஆனால் சம்யுக்தா அவரே நடிப்பதாக கூறி அந்த காட்சியில் நடித்து இருக்கிறார். அப்போது அவரது காலில் காயம் ஏற்பட்டு கீழே விழுந்து அவர் வலியால் துடித்திருக்கிறார். அதன் பின் சம்யுக்தாவை உடனே அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள்.

இதை தொடர்ந்து அவரது காலில் ligament tear ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். அதற்காக சிகிச்சை எடுத்து வருகிறார் சம்யுக்தா ஹெக்டே.