• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி..!

Byவிஷா

Jun 10, 2023

ஆந்திரா மாநில அமைச்சரும், பிரபல திரைப்பட நடிகையுமான ரோஜா செல்வமணி, கால் வீக்கம் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. இவர் இயக்குனர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் ஆவார். இதையடுத்து சினிமாவில் கொடிகட்டி பறந்த ரோஜா கொஞ்சம் கொஞ்சமாக அரசியலில் இறங்க ஆரம்பித்தார். அதன்பின்னர் நடிகை ரோஜா அமைச்சரானதும் நடிப்புக்கு முழுக்கு போட்டு ஒதுங்கினார்.
ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவர் 2014 மற்றும் 2019 சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது ஆந்திராவின் சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ளார். இந்நிலையில் அமைச்சர் ரோஜா, திடீரென சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கால்வலி மற்றும் வீக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.