18 மாதங்களில் 62 நாடுகளுக்கு அஜித்குமார் மோட்டாசைக்கிளில் சுற்றுபயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில நாட்களாக அஜித்குமார் பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மோட்டார் சைக்கிள் பயணம் சென்றார். விசாகப்பட்டினத்தில் துணிவு படப்பிடிப்பில் பங்கேற்று முடித்ததும் இமயமலை பகுதியில் மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொண்டு கார்கில் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினார். கேதார்நாத், பத்ரி நாத் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.
இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் வலைத்தளத்தில் வெளியானது
சுற்றுபயணத்தில் அஜித் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க அஜித் தயாராகி உள்ளார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு மோட்டார் சைக்கிளில் உலகை சுற்ற அஜித்குமார் திட்டமிட்டு உள்ளார். அதாவது 62 நாடுகளில் தொடர்ந்து 18 மாதங்கள் மோட்டார் சைக்கிளில் அவர் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒன்றரை வருடம் மோட்டார் சைக்கிள் சுற்றுப் பயணம் செய்து முடித்த பிறகே அடுத்த படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. அஜித்தின் துணிவு படம் பொங்கல் பண்டிகையில் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.