• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நடிகை காயத்ரி ரகுராம் நீக்கம் – அண்ணாமலை அறிக்கை..!!

ByA.Tamilselvan

Nov 22, 2022

கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் நடிகை காயத்ரி ரகுராம் ஈடுபட்டதால் தற்காலிக நீக்கம் செய்யப்படுவதாக அண்ணாமலை அறிக்கை.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரண் OBC அணியின் மாநில பொது செயலாளர் சூர்யா சிவா இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று இன்று காலை என் கவனத்திற்கு வந்தது.இந்த சம்பவத்தை விசாரித்து கட்சி தலைமைக்கு அடுத்த 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவரும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவருமான கனக சபாபதி தெரிவித்துள்ளார்.ஒழுங்கு நடவடிக்கை குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை OBC அணியின் மாநில பொது செயலாளர் சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜகவின் பல்வேறு பிரிவுகளுள் ஒன்றாக இருக்கும் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவராக நடிகை காயத்ரி ரகுராம் இருந்து வருகிறார்.. கட்சியில் இணைந்து ஓரிரு வருடத்திற்கெல்லாம் தமிழக பாஜக இந்த பொறுப்பை காயத்திரிக்கு வழங்கியிருந்தது. இந்நிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் அறிவுறுத்தப்படுகிறது.