மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் அம்பிகா ராவ். இவர் கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் ஆவார்.
இவர் மீசை மாதவன், தமாஷா,வைரஸ், கும்ப்ளங்கி நைட்ஸ் உள்பட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
மேலும், இவர் சால்ட் அண் பெப்பர், தொம்மனும் மக்களும், ராஜமாணியம் , வெள்ளி நட்சத்திரம் உட்பட பல படங்களில் இணை இயக்குனராகவும் பண்யாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகை அம்பிகா ராவ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றிரவு மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலக நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.