
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதில் இபிஎஸ் அதிரடியாக முடிவெடுத்துள்ளார்.
கடந்த ஜூன் 23ல் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடந்தது. ஓபிஎஸ்,இபிஎஸ் தரப்பில் மோதல் ஏற்பட்டதால் எந்ததீரமானம் நிறைவேற்றப்படவில்லை. மீண்டும் வரும் ஜூலை 11 ம்தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.பல காரணங்களுக்கு மாற்று இடங்களை தேடி இபிஎஸ் தரப்பு கடைசியில் மீண்டும் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
மேலும் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபம் சென்டிமென்டாக இபிஎஸ்க்கு சாதகமாக உள்ளதால் மீண்டும் அதே இடத்தில் நடத்த இபிஎஸ் முடிவுசெய்திருப்பதாக தெரிகிறது.
