• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தேனி ஜெயமங்கலத்தில் நடிகர் விஜய் பயிலகம்…

ByM. Dasaprakash

Nov 26, 2023

திரைப்பட நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
அதே சமயம் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் ஏழை, எளிய கிராமப்புற பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், ‘தளபதி விஜய் பயிலகம்’ என்ற பெயரில் சென்னை பெரம்பூரில் உள்ள கொடுங்கையூரில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் திறக்கப்பட்டு இதேபோல் தமிழகம் முழுவதும் திறக்கப்படும் என தெரிவிக்கபட்டது. இதனை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் முதற்கட்டமாக பெரியகுளம் சட்ட மன்ற தொகுதி ஜெயமங்கலத்தில் தளபதி விஜய் பயிலகம்
தளபதி விஜய் நூலகம் மாவட்ட தலைவர் LEFT பாண்டி ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். இந்த நிகழ்வில் ரசிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.