பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜூனா தமிழ், தெலுங்கு, இந்தி மொழியிலும் பிரபலமனாவர். இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நாகார்ஜூனா, தற்போதும் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
சமீபத்தில் நாகார்ஜூனா அவரது மகனுடன் இணைந்து நடித்த பங்கர் ராஜு படம் ரிலீஸ்ஆனது. இந்தப் படம் ரிலீஸ் ஆன நாள் முதலில் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. தற்போது பிரம்மாஸ்த்ரா, தி கோஸ்ட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நடிகர் நாகார்ஜூனா.
இந்நிலையில் நடிகர் நாகார்ஜூனா தனது மனைவி அமலாவுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா மிரட்டி வரும் நிலையில் அவ்வப்போது லாக்டவுன் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக திருப்பதி கோவிலுக்கு செல்லாமல் இருந்த நாகார்ஜூனா இன்று தனது மனைவியுடன் சென்று வழிபட்டுள்ளார்.
கோவிலில் நாகார்ஜூனாவை பார்த்த ரசிகர்கள் அவருடன் ஆர்வமுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். நாகார்ஜூனா திருப்பதி கோவிலில் வழிப்பட்ட போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.