நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ள ‘கெஹ்ரையன்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. இதில் சித்தாந்த் சதுர்வேதி, அனன்யா பாண்டே நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை ஷகுன் பத்ரா இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியிட்டிருந்தது தயாரிப்பு நிறுவனத்தால் 2.42 நிமிடங்கள் கொண்டுள்ள இந்த படத்தின் டிரைலரில் தீபிகா படுகோனே குப்பையை குப்பைத்தொட்டியில் போடுமாறு சொல்வார். ஆனால் அதை நாயகன் மும்பையில் பாதி பேர் இப்படித்தான் என சொல்லி செய்ய மறுக்க தீபிகாவே அதனை குப்பைத்தொட்டியில் சேர்ப்பார்.
விழிப்புணர்வு கொடுக்கும் வகையில் அந்த காட்சியை ‘கட்’ செய்து அப்படியே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது பெருநகர மும்பை மாநகராட்சி. குப்பைகளை சரியான இடத்தில் சேர்க்குமாறு சொல்லி அது தொடர்பான வாசகத்தையும் கொடுத்துள்ளது பெருநகர மும்பை மாநகராட்சி. இந்த வீடியோ பதிவை பார்த்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது கெஹ்ரையன் டிரைலர் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.