• Sat. Nov 28th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

போட்டியை துவக்கி வைத்த நடிகர் மன்சூர் அலிகான்..,

BySeenu

Nov 28, 2026

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் உணவகமான காசிபோ (Gazibo) உணவகத்தில் அரேபியன் உணவான மந்தி சாப்பிடும் போட்டி நடைபெற்றது.

இதில் நடிகர் மன்சூர் அலிகான் கலந்து கொண்டுபோட்டியை தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் முதன் முறையாக நடைபெற்ற இதில்,ஒரு மணி நேரத்தில் ஒரு முழு சிக்கன் மற்றும் மந்தி எனும் பாஸ்மதி அரிசியால் தயார் செய்யப்பட்ட உணவை
யார் அதிக அளவு மந்தி உணவைச் சாப்பிடுகிறார்கள் என்பதன் அடிப்படையில் போட்டி நடைபெற்றது.

இதில் பங்கேற்ற போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சளைக்காமல் போட்டி போட்டு மந்தியைச் சாப்பிட்டனர்.

போட்டியைப் பார்வையிட்டவர்களும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர். அதிக அளவு மந்தி சாப்பிட்டு முதலிடம் பிடிப்பவருக்குப் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், அரேபிய நாடுகளில் பிரபலமான மந்தி உணவை கோவையில் அறிமுகப்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது என்றார். ஜாதி, மத பேதமின்றி அனைவரும் ஒரே இடத்தில், ஒரே தட்டில் அமர்ந்து உணவருந்தும் கலாச்சாரம் சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் வளர்க்கும் எனக் குறிப்பிட்டார்.

மேலும், உணவுப் பொருட்களில் கலப்படம் அதிகரித்து வரும் நிலையில், மக்களுக்கு தரமான அரிசி மற்றும் ஆரோக்கியமான உணவுகளை வழங்குவது அவசியம் என்றும், பாரம்பரிய சீரகச் சம்பா அரிசியில் தயாரிக்கப்படும் உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

போதைப்பழக்கம், புகைப்பழக்கம் போன்றவற்றைக் கைவிட்டு ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மக்கள் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், உணவு என்பது பசியைப் போக்குவதற்கான ஒன்றாக மட்டுமின்றி, மக்களிடையே ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் ஏற்படுத்தும் பண்பாடாகவும் திகழ்கிறது என்று தெரிவித்தார்.